வாஷிங்டன்
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் அதிகம் இடம் பெற்ற பெயர் செர்கி கிஸ்லியாக் என்பதேயாகும். தற்காலிகமாக துணைத் தூதர் கோஞ்சார் தூதரின் அலுவல்களை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
கிஸ்லியாக் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இப்பதவியில் உள்ளார். இவருக்கு பதிலாக ரஷ்ய துணை வெளியுறவுத் துறை அமைச்சர் அனடோலி அண்டோனவ் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக அண்டோனவ்வின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ்சுடன் தேர்தல் பற்றி கிஸ்லியாக் பேசியதாகவும் கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்புச் செயலர் மைக்கேல் ப்ளின் கிஸ்லியாக்கை சந்தித்து பேசியதை மறைத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதிபர் டிரம்ப்பின் மருமகன் குஷ்னேரும் கிஸ்லியாக்கை சந்தித்து பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. தவிர தொலைபேசியிலும் இருவரும் பேசியுள்ளதாகவும், குஷ்னேர் தேர்தல் பரபரப்பில் இருந்த அக்காலகட்டத்தில் கிஸ்லியாக்குடன் பேசியது நினைவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்போது தினசரி ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் கிஸ்லியாக்குடன் பேசியது நினைவில்லை என்றார் குஷ்னேர்.
ரஷ்யா புது தூதரை நியமிப்பது போல அமெரிக்காவும் ஜோன் ஹண்ட்ஸ்மேனை ரஷ்யாவிற்கான புதிய தூதராக நியமிக்கவுள்ளது.