இந்தியர்களில் 64 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை: சர்வே

இந்தியர்களில் 64 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்று சர்வே கூறுகிறது.
இந்தியர்களில் 64 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை: சர்வே
Published on

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குத்தான் முன்னுரிமை கொடுப்பதாக 46 சதவீதம் பேர் கூறிக்கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் (31 சதவீதம்) உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் இல்லை என்று கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் இருந்தாலும் நேரம்தான் அதற்கு தடையாக இருப்பதாக சொல்கிறார்கள். அதேவேளையில் உடற்பயிற்சி செய்பவர்கள் எந்தவகையான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதிலும் கவனிக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்யும் இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதாவது 67 சதவீதம் பேர் நடைப்பயிற்சியைத்தான் தேர்வு செய்கிறார்களாம். அந்த அளவிற்கு

நடைப்பயிற்சி மீதுதான் பெரும்பாலானோருக்கு நாட்டம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக யோகா, கிராஸ்பிட் போன்ற பயிற்சிகளை 26 சதவீதம் பேர் மேற்கொள்கிறார்கள்.

கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு சார்ந்த பயிற்சிகளில் 11 சதவீதம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். புஷ் அப், புல் அப், ஸ்வார்ட்ஸ் போன்ற உடலை வலுப்படுத்தும் கடினமான உடற்பயிற்சிகளை 10 சதவீதம் பேர்தான் செய்கிறார்கள். பளு தூக்குதல் போன்ற கடினமான பயிற்சிகளை செய்வதற்கு பலரும் விரும்புவதில்லை என்றும் சர்வே நடத்திய மின்டல் என்னும் அமைப்பு குறிப்பிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com