மோட்டோ ஜி 62 ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஜி 62 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோ ஜி 62 ஸ்மார்ட்போன்
Published on

இது 6.5 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஸ்நாப்டிராகன் 695 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 6 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.17,999. 8 ஜி.பி. மாடல் விலை சுமார் ரூ.19,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com