சண்டே ஸ்பெஷல் : சுவையான இறால் மசாலா செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான இறால் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
சண்டே ஸ்பெஷல் :  சுவையான இறால் மசாலா செய்வது எப்படி..?
Published on: 

தேவையான பொருட்கள்:-

இறால் - கால் கிலோ

நல்லெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 2 (பெரியது)

தேங்காய் - அரை முறி

மஞ்சள் பொடி - சிறிதளவு

மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

மல்லிப் பொடி - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

பட்டை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகு பொடி - அரை டீஸ்பூன்

சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்

மல்லி இலை - சிறிதளவு

புதினா இலை - சிறிதளவு

செய்முறை

முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் வெட்டிவைத்த இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

லேசாக வதங்கியதும் வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும் வெட்டிவைத்த தக்காளி, துருவிய தேங்காய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன்பிறகு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, ஆறவிடவும். பின்னர், அதை மிக்சி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். மசாலா ரெடி.

அடுத்து, கேஸ் அடுப்பை மீண்டும் 'ஆன்' செய்து, வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக வெந்து, தண்ணீர் வற்றி தொக்கு பதத்திற்கு வரும்.

அந்த நேரத்தில், கழுவிவைத்த இறாலை சேர்க்கவும். பெரிய இறாலாக இருந்தால் 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம். சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். இறால் வெந்துவிட்டால் எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கும். நிறைவாக மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை தூவி இறக்கவும். சுவையான இறால் மசாலா தயார். சாதத்திற்கு சரியான காம்பினேஷன்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com