சிறப்பு அந்தஸ்து ரத்து: காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரத்தில், காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது.
Published on

மாஸ்கோ,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கி கூறப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு ரஷியா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சுமுக உறவை ரஷியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. காஷ்மீரின் அந்தஸ்து மாற்றம் மற்றும் அதை 2 பகுதிகளாக பிரிக்கும் நடவடிக்கை அனைத்தும் இந்திய குடியரசின் அரசியல் சாசன கட்டமைப்புக்குள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் நிலைமை மோசமடைவதை இரு நாடுகளும் அனுமதிக்காது என நம்புவதாக கூறியுள்ள ரஷியா, தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் அடிப்படையில் அரசியல் மற்றும் தூதரக ரீதியில் இரு நாடுகளும் தீர்வு காணும் என நம்புவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com