இன்ஸ்பெக்டரை தாக்கிய வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை: வள்ளியூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த வக்கீல் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வக்கீல் கிரீனிவாச பிரசாத்.
Published on: 

திருநெல்வேலி,

போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த கிரீனிவாச பிரசாத் (வயது 50), வக்கீல் ஆவார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார் என்பவருக்கும் இடையே கடந்த 6.9.2011 அன்று தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் பால்துரை வழக்குபதிவு செய்து கிரீனிவாச பிரசாத்தை கைது செய்ய சென்றார். அப்போது அவர் திடீரென இன்ஸ்பெக்டர் பீட்டர் பால்துரையை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, கையினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் கிரீனிவாச பிரசாத் மீது நாகர்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி அசோக்குமார் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் கிரீனிவாச பிரசாத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சகாதேவன் ஐயர் வாதிட்டார்.

X