வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Published on

நெல்லை, 

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்கள் கனமழை வெளுத்து வாங்கியது.

4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்ததால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரெயில்கள் உட்பட 12 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com