

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 6,80,261 ஆண் வாக்காளர்களும், 7,15,028 பெண் வாக்காளர்களும், 206 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 13,95,495 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 6,80,261 ஆண் வாக்காளர்கள், 7,15,028 பெண் வாக்காளர்கள் மற்றும் 206 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 13,95,495 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இன்று (நவம்பர் 12) முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் வெளியிட்டார்.
01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் விவரங்கள் பின்வருமாறு:
1,00,946 ஆண் வாக்காளர்கள், 1,05,103 பெண் வாக்காளர்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,06,065 வாக்காளர்கள்.
1,22,307 ஆண் வாக்காளர்கள், 1,29,582 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,51,954 வாக்காளர்கள்.
1,13,791 ஆண் வாக்காளர்கள், 1,19,946 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,33,769 வாக்காளர்கள்.
1,06,187 ஆண் வாக்காளர்கள், 1,09,131 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,15,323 வாக்காளர்கள்.
1,19,421 ஆண் வாக்காளர்கள், 1,25,827 பெண் வாக்காளர்கள், 56 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,45,304 வாக்காளர்கள்.
1,17,609 ஆண் வாக்காளர்கள், 1,25,439 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2,43,080 வாக்காளர்கள்.
மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தம் 6,80,261 ஆண் வாக்காளர்களும், 7,15,028 பெண் வாக்காளர்களும், 206 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 13,95,495 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2027 பணிகள் இன்று (12.11.2026) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி 12.11.2026 முதல் 11.12.2026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்குரிய விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் நேரில் அளிக்கலாம். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இச்சேவையைப் பெறலாம்.
மேலும், வாக்காளர்களின் நலன் கருதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பின்வரும் 3 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன:
நவம்பர் 21, 2026 (சனிக்கிழமை), நவம்பர் 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை), நவம்பர் 29, 2026 (ஞாயிற்றுக்கிழமை).
(குறிப்பு: தீபாவளி மறுநாள் அரசு அறிவித்த விடுமுறைக்கு ஈடாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால், நவம்பர் 28 அன்று நடைபெற இருந்த சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது). பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை அளித்திடலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தகுதி நாளாக இதுவரை ஜனவரி 1 மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 என நான்கு தகுதியேற்படுத்தும் நாட்களாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 17 வயது முடிவடைந்த நபர்களும் முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். எனினும், 01.01.2027 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இச்சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலிக்கப்படும்.
நேரில் செல்ல இயலாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ECINet செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபு, அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.