போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 2 சவரன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சென்னை ஆவடி பகுதியில் போலீஸ் குடியிருப்பில் பட்டப்பகலில் பொருளாதார குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 2 சவரன் நகை திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க நகைகள் திருட்டு.
Published on: 

சென்னை,

சென்னை ஆவடி பகுதியில் போலீஸ் குடியிருப்பில் பட்டப்பகலில் பொருளாதார குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 2 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருளாதார குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்

சென்னை ஆவடி எச்.வி.எப். சாலையில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் போலீஸ்காரர்கள் வீடு மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தேவிகா சுந்தரி (வயது 45) என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் ரவி(58), தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

2 சரவன் நகை திருட்டு

நேற்று முன்தினம் காலை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார். பள்ளி முடிந்து இவர்களது மகள் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ரவி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் பட்டப்பகலில் இன்ஸ்பெக்டர் தேவிகா சுந்தரியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகையை திருடிச் சென்றிருப்பது தெரிந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆவடி போலீஸ் குடியிருப்பில் பெண் இன்ஸ்பெக்டரின் வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X