

சென்னை,
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னரின் செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என மொத்தம் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில்,
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயலாளராக இருந்த சஜன்சிங் ஆர் சவான், லேக்பவனில் ஆளுநரின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, யர் கல்வித்துறையின் அரசு சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அறிவியல் நகரத்தின் முதன்மை செயலாளர் / துணை தலைவராக இருந்த ஹர் சகாய் மீனா, நிலபுனரமைப்பு முதன்மை செயலாளர்/ ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் பல் வளத்துறையின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ஆவின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட உள்ளார்.
* தமிழ்நாடு வார்ஹவுசிங் காப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குநராக செயல்பட உள்ளார்.
* தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குநராக இருந்த குமாரவேல் பாண்டியன், மாநில திட்டமிடல் கமிஷனின் உறுப்பு செயலாளராக செயல்பட உள்ளார்.
* திருநெல்வேலி கலெக்டராக இருந்த சுகுமார், ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் பிரிவின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை பெருநகர மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறைியன் துணை ஆணையராக இருந்த பிரதிவிராஜ், கரூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* 'எல்காட்' இயக்குநராக இருந்த தீபனவிஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
* கடலூர் மாவட்டம் சிதம்பரம் டிவிஷனின் சப் - கலெக்டராக இருந்த கிசான் குமார், கடூர் மாநகராட்சியின் ஆணையராக செயல்படுவார்.
* கரூர் மாவட்டம் குளித்தலை டிவிஷன் சப் - கலெகடர் ஸ்வாதி ஸ்ரீ திருச்சி மாவட்டம் கிராம மேம்பாட்டு ஏஜென்சி கூடுதல் கலெக்டராக (டெவலப்மென்ட்/திட்ட அதிகாரி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* காஞ்சிபுரம் டிவிஷன் சப் கலெக்டர் ஆசிக் அலி, காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்படடுள்ளார்.
* கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் டிவிஷன் சப் கலெக்டர் விஜய் குமார் மீனா, திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டிவிஷன் சப் கலெக்டர் அனந்த் குமார் விழுப்புரம் மாவட்டம் கூடுதல் கலெ க்டராக செயல்பட உள்ளார்.
* ஈரோடு மாவட்டம் கோபி டிவிஷன் சப் கலெக்டர் சிவானந்தம் சேலம் ாவட்டம் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* நீலகிரி மாவட்டம் குன்னூர் டிவிஷன் சப் கலெக்டர் சங்கீதா, உதகமண்டலம் ஸ்பெஷல் சிறப்பு ஏரியா மேம்பாட்டு திட்டத்தின் (உதகமண்டலம்) திட்ட இயக்குநராக செயல்பட உள்ளார்.
* சிவகங்கை மாவட்டம் தேகவ்கோட்டை டிவிஷன் சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், சிவங்கை மாவட்டம் கூடுதல் கலெக்டராக செயல்பட உள்ளார்.
* தேனி மாவட்டம் பெரியக்குளம் டிவிஷன் சப் கலெக்டர் ரஜத் பீட்டன், தேனி மாவட்ட கூடுதல் கலெக்டராக (மேம்பாடு)/திட்ட அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.