நடிகர்களை ஏரிக்கு அழைத்து சென்ற சுற்றுச்சூழல் காவலர்கள் 3 பேர் பணிநீக்கம்: மாவட்ட வன அதிகாரி நடவடிக்கை

நடிகர்களை ஏரிக்கு அழைத்து சென்ற சுற்றுச்சூழல் காவலர்கள் 3 பேரை பணிநீக்கம் செய்து மாவட்ட வன அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடிகர்களை ஏரிக்கு அழைத்து சென்ற சுற்றுச்சூழல் காவலர்கள் 3 பேர் பணிநீக்கம்: மாவட்ட வன அதிகாரி நடவடிக்கை
Published on

கொடைக்கானல்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் கொடைக்கானலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் அனுமதி பெறாமல் சென்று அங்கு மீன் பிடித்தனர். இதுகுறித்து எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையின் சார்பில் நடிகர்கள் விமல், சூரிக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி விசாரணை நடத்தி நடிகர்களை தடைசெய்யப்பட்ட பேரிஜம் ஏரி பகுதிக்கு அழைத்துச்சென்ற வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் சைமன், அருண், செல்வம் ஆகிய 3 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நடிகர்கள் ஏரிக்கு செல்ல காரணமான வனத்துறை அதிகாரிகள் குறித்தும், நடிகர்களுடன் வந்த மேலும் 2 பேர் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com