கர்மவீரர் காமராஜரின் 121-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

காஞ்சீபுரம் முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்மவீரர் காமராஜரின் 121-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்
Published on

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், ஓ.பி.எஸ் அணி அவைத்தலைவர் எஸ்.ரங்கநாதன், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் திருவேங்கடம், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீமணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து, கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளில் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உபகரணங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com