

சென்னை,
மகா சிவராத்திரி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
விழுப்புரம் - திருவண்ணாமலை (06130/06129):-
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகள்ல் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகள்ல் மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்துசேரும்.
விழுப்புரம் - வேலூர் (06167/06168):-
விழுப்புரத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகள்ல் இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், வேலூர் கண்டோன்மென்டில் இருந்து விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு வேலூர் கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் வந்துசேரும்.
விழுப்புரம் - காட்பாடி (06049/06050):-
விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 1.05 மணிக்கு காட்பாடி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் வருகிற பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 5.10 மணிக்கு விழுப்புரம் வந்துசேரும்.