5 வாக்காளர்களை கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவு

வெறும் 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடி அமைத்தது கவனத்தை ஈர்த்தது.
5 வாக்காளர்களை கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் 4 வாக்குகள் பதிவு
Published on

தேனி,

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை வனப்பகுதியில் வெறும் 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடி அமைத்தது கவனத்தை ஈர்த்தது.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், 15 நிமிடங்களுக்குள் 5 பேரில் 4 பேர் வாக்களித்தனர். ஆனால், ஒரே ஒரு வாக்காளர் மட்டும் வாக்களிக்க வராததால், அதிகாரிகள் மாலை வரை காத்திருந்தனர். இறுதியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவானது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைத்து, அதிகாரிகள் இரவு நேரத்தில் மீண்டும் ஆண்டிப்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் வெள்ளிமலை வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர் ஒருவர் ஆண்டிப்பட்டி தொகுதியை சேர்ந்தவராக இருந்ததால், அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களை வழங்கி அவருக்கான வாக்கை வெள்ளிமலை வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். இதன்மூலம் வெள்ளிமலை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 5 ஆக மாறியது.

காட்டுப்பகுதியில் 75 கி.மீ தூரம் கரடு முரடான சாலைகளில் சுமார் 6 மணி நேரம் பயணித்து, 6 அதிகாரிகளுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இன்று காலையில் வந்தடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com