செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 3 பழங்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் முனுசாமி, விழுப்புரம் செங்குட்டுவன் ஆகியோர் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தேவரடியார் தாங்கல் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாறையில் 3 கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையாருக்கு நில தானம் செய்ததை குறிப்பிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தேவரடியார் தாங்கல் ஏரி மற்றும் விளைநிலப் பகுதியில் பாறைகளில் வெட்டப்பட்டு இருந்த 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

Also Read
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் - அர்ச்சனா பட்நாயக்
செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

இவற்றில் ஒரு கல்வெட்டில் செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கர் என்பவர் நிர்வாகம் செய்தபோது மங்களம் என்ற ஊரை சேர்ந்தவர்களின் வழிபாட்டில் இருந்து வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்ததை குறிப்பிடுவதாக இருப்பது கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு கி.பி. 16-17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.

தேவரடியார் தாங்கல் அருகில் கொத்தமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் 400 ஆண்டுகளுக்கு முன் மங்கலாபுரம் என்று அழைக்கப்பட்ட நிலையில், தற்போது கொத்தமங்கலம் என்று அழைக்கப்படுவதை அறிய முடிகிறது.

Also Read
காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும்? - டிடிவி தினகரன்
செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள மற்ற 2 கல்வெட்டுகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன. இதுவும் மேற்கண்ட காலகட்டத்தை சேர்ந்த நில தானம் குறித்த கல்வெட்டாக இருக்கலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Also Read
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்
செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com