காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும்? - டிடிவி தினகரன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Also Read
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9-ந்தேதி தொடக்கம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Also Read
தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.
கோப்புப்படம்

போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, கடந்த காலங்களை ஒப்பிடும்போது குற்றங்கள் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது.

Also Read
போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற 751 மருத்துவர்களுக்கு நியமன ஆணை எங்கே? - அன்புமணி கேள்வி
கோப்புப்படம்

எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பி, அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com