திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
திருவண்ணாமலை கோவில்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த மாதம் பவுர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று கடந்த மாத பவுர்ணமிக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் நடந்தது. இதில் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.6 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 491 பக்தர்கள் செலுத்தியிருந்தனர். 188 கிராம் தங்கம், 1.695 கிலோ வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com