சிறார்கள் ஓட்டிய 8 பைக்குகள் பறிமுதல்: பெற்றோரை அழைத்து எச்சரிக்கை


சிறார்கள் ஓட்டிய 8 பைக்குகள் பறிமுதல்: பெற்றோரை அழைத்து எச்சரிக்கை
x

சிறார்கள் பைக் ஓட்டுவதை தடுக்க ஆறுமுகநேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் திலீபன் கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் சிறார் பைக் ஓட்டுவதை தடுக்க ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் திலீபன் கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை காயல்பட்டினம்- திருச்செந்தூர் சாலை காட்டு மொஹதும் பள்ளி மற்றும் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதியில் சிறார்கள் ஓட்டிய 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

1 More update

Next Story