

விழுப்புரம்,
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு இயக்கமாக 8,012 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்ட மேலாணி இயக்குநர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கினங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களில் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு இயக்கமாக 7,753 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இதில் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மண்டலத்திலிருந்து 195 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 101 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 566 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 205 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 35 சிறப்பு நடைகளும், திருவள்ளூர் மண்டலத்திலிருந்து 30 சிறப்பு நடைகளும் என 1,132 பேருந்து சிறப்பு நடைகளும்,
23.11.2026 திங்கட்கிழமை அன்று பவுர்ணமி தினத்தை முன்விட்டு விழுப்புரம் மண்டலத்திலிருந்து 284 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 180 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 802 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 485 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 82 சிறப்பு நடைகளும், திருவள்ளூர் மண்டலத்திலிருந்து 45 சிறப்பு நடைகளும் என 1,878 பேருந்து சிறப்பு நடைகளும்,
24.11.2026 செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்திலிருந்து 500 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 201 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 1,212 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 818 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 152 சிறப்பு நடைகளும், திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து 82 சிறப்பு நடைகளும் என 3,055 பேருந்து சிறப்பு நடைகளும்,
25.11.2026 புதன்கிழமை அன்று விழுப்புரம் மண்டலத்திலிருந்து 332 சிறப்பு நடைகளும், கடலூர் மண்டலத்திலிருந்து 231 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 874 சிறப்பு நடைகளும், வேலூர் மண்டலத்திலிருந்து 345 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 102 சிறப்பு நடைகளும், திருவள்ளுர் மண்டலத்திலிருந்து 63 சிறப்பு நடைகளும் என 1,947 பேருந்து சிறப்பு நடைகளும்,
22.11.2006 முதல் 25.11.2006 வரை நான்கு நாட்களுக்கு மொத்தம் 8,012 சிறப்புபேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், அடையாறு, புதுச்சேரி. திண்டிவனம், சேலம், பெங்களூர், திருப்பத்தூர். திருப்பூர், கோயம்பத்தூர், வேலூர், ஏற்காடு, ஆரணி, செய்யார், காஞ்சிபுரம், வந்தவாசி, சேத்பட், மேல்சோழகுப்பம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், திருக்கோயிலூர், விருத்தாசலம். மணலூர்பேட்டை, தண்ராம்பட்டு தாணிப்பாடி, கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு நடைகள் இயக்கப்பட உள்ளது.
எனவே பொது மக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கார்த்திகை தீப திருநாளை மகிழ்ச்சியுடனும், சிறப்புடனும் கொண்டாடிட வேண்டும் என மேலான இயக்குநர் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.