சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்

சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்
சத்தியமங்கலம் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்
Published on

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கோம்பு பள்ளம் அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் லாரியில் இருந்த கரும்பு துண்டுகள் முழுவதும் சிதறி சாலையில் விழுந்தன. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com