ஓடும் ரெயிலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு

ஓடும் ரெயிலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிந்த நபரை தேடிவருகின்றனர்.
ஓடும் ரெயிலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 32). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி முத்துமாரி (28). நேற்று முன்தினம் இரவு முத்துமாரி தனது குழந்தை மற்றும் மாமியாருடன் காஞ்சீபுரத்திலிருந்து புறநகர் ரெயிலில் அரக்கோணத்திற்கு வந்தார். ரெயில் தக்கோலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது மர்ம நபர் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார். அவர் முத்துமாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த 4 கிராம் கம்மலை கொள்ளையடித்தார். இதற்கிடையே ரெயில் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னலுக்காக நின்றது. உடனே அந்த நபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரனை நடத்தி வருகின்றார். மேலும், கொள்ளை சம்பவம் செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com