சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
Published on

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பஜார் தெருவை சேர்ந்தவர் ஜெகன்மோகன் (வயது 45). இவரது மனைவி சலுஜா (42). இவர்களது மகன் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறான். இந்த நிலையில் நேற்று மாலை சலுஜா பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்து வருவதற்காக சென்றார். தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பாச்சூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிள் வந்து 2 நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த தாலி சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

இதனால் பதறிப்போன அவர் சங்கிலியை இறுக பற்றி கொண்டார். அதில் 6 பவுன் சங்கிலி கொள்ளையர்கள் கையில் சிக்கி கொண்டது. இதை தொடர்ந்து திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com