காற்று நிரப்பியபோது லாரி டயர் வெடித்து வாலிபர் உயிரிழப்பு

நாவலூரில் உள்ள பஞ்சர் கடையில் ஊழியர்கள் லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் ஒட்டி காற்று பிடித்தபோது, திடீரென அந்த டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
வாலிபர் உயிரிழப்பு
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் காற்று நிரப்பியபோது லாரி டயர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லாரி டயர் வெடித்தது

சென்னை, சோழிங்கநல்லூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது38). இவர் தனது நண்பர் ஒருவருடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு பைக்கில் சென்றார். அப்போது நாவலூரில் உள்ள பஞ்சர் கடைக்கு பைக்கின் டயருக்கு காற்று பிடிப்பதற்காக சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் லாரி டயர் ஒன்றுக்கு பஞ்சர் ஒட்டி காற்று பிடித்து கொண்டு இருந்தனர். அதன் அருகில் சரவணகுமார் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் திடீரென லாரி டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

வாலிபர் உயிரிழப்பு

அப்போது வெடித்த லாரி டயர் பறந்து சென்று சரவணகுமார் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com