லாரி மோதி வியாபாரி பலி

லாரி மோதி வியாபாரி பலியானார்.
லாரி மோதி வியாபாரி பலி
Published on

மேட்டூர்:

ஓமலூரை அடுத்த பூசாரிபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40), பூ வியாபாரி. இவர், மேச்சேரியில் இருந்து மேட்டூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். மேட்டூரை அடுத்த ராமன்நகர் அருகே வந்த போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மகேந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தமிழ்செல்வனிடம் விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com