பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்து: தொழிலாளர் நலத்துறை கொடுத்த அதிரடி உத்தரவு

பட்டாசு ஆலைகளில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்து
Published on

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விபத்து நடந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, அரசு உரிமம் பெற்ற கட்டிடத்திற்குள் பட்டாசுகள் தயாரிக்காமல் கட்டிடத்தில் வெளியே பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு உரிய உரிமம் பெற்றுள்ளனரா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட கலெக்டர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com