

சென்னை,
நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்!
இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.