பிப். 4-ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கோப்புப்படம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 4.2.2026 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Also Read
ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை குறைவு... நிலவரம் என்ன..?
கோப்புப்படம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com