மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் அனுமனந்தல் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

Also Read
ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை குறைவு... நிலவரம் என்ன..?
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (27 வயது), மின்சாரம் சார்ந்த பணிகளை செய்து வந்த நிலையில் நேற்று (29.01.2026) காலை சுமார் 9.30 மணியளவில் அனுமனந்தல் கிராமம், சன்னாசி கோவில் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீட்டில் சுவரை துளையிடும் கருவி மூலம் துளையிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

Also Read
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோப்புப்படம்

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com