அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் - வெளியான முக்கிய அறிவிப்பு


அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் - வெளியான முக்கிய அறிவிப்பு
x

கோப்புப்படம்

சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை


சென்னையில் மின்சார ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. அந்த வகையில், தற்போது, சென்னை கோட்டத்தில் 9 பெட்டிகளுடன் இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் இனி 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி, சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் பயணிகளின் வசதிக்காக, மின்சார ரெயில்களின் பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி, தற்போது, 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு ரெயிலில் இடவசதி கிடைக்கும் (21சதவீதம் கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்). இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story