ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு: தமிழக அரசு நடவடிக்கை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு: தமிழக அரசு நடவடிக்கை
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. கடந்த 25ஆம்தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று கூறி அப்போலோவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி, உணவுக்கூடத்தின் அளவுகூட இல்லாத இடத்தில் ஆணையம் செயல்பட்டு வருகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன். இன்றைக்குள் (30 ஆம் தேதி) ஆணையம் செயல்பட மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதலாக 500 சதுர அடி இடம் ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சென்னை, எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மஹாலில் கூடுதலாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com