ராமநாதசாமி கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தங்க பல்லக்கில் அம்பாள் வீதி உலா

ராமேசுவரம் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ராமநாதசாமி கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தங்க பல்லக்கில் அம்பாள் வீதி உலா
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் மாசி திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனிடையே இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அம்பாள்சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. அப்போது கொடிமண்டபம் எதிரே வைக்கப்பட்டிருந்த பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி வரை 17 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகின்றது.

திருவிழாவில் வருகின்ற 31-ம் தேதி அன்று அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும், ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று சாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் 3-ம் தேதி அன்று சாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், திருவிழாவின் 2-வது நாளான இன்று பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com