“தமிழக அரசியல் வரலாற்றில் தனியிடம் பதித்தவர் அண்ணா” - டிடிவி தினகரன் புகழாரம்

அறிவால் அரசியலையும் அன்பால் மக்களின் இதயங்களையும் வென்றவர்.
டிடிவி தினகரன்
Published on

சென்னை,

பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

புகழாரம்

தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த தமிழ் தாயின் தலைமகன், ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த மாபெரும் தலைவர், அறிவால் அரசியலையும் அன்பால் மக்களின் இதயங்களையும் வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனியிடத்தைப் பதித்த அரசியல் ஆசான், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று.

பேரறிஞர் அண்ணா

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற கொள்கையை வாழ்வின் நெறியாக ஏற்று, பேச்சில் நயம், எழுத்தில் வலிமை, செயல்பாட்டில் நேர்மை ஆகியவற்றைத் தனது அடையாளமாகக் கொண்டு, தமிழக அரசியலுக்கு புதிய பாதையை அமைத்து மக்கள் ஆட்சியை நிலைநாட்டிய மகத்துவமிக்க தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த இந்நாளில், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com