வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்!

இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்!
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் திடீர் சோதனை

பட்டா மாறுதல், வருமானம், இருப்பிடம், சமூகச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சேவைகளை வழங்குவதற்காக சில வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

41 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் சிக்கியது. இதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

தீவிர விசாரணை

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com