தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி
Published on

சென்னை,

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

டெல்லி சிறப்பு பிரதிநிதி

இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?

மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com