ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. இதன்படி சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com