அரியலூர்: சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ரூ.41 ஆயிரம் சிக்கியது

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ.41 ஆயிரம் சிக்கியது.

ரூ.41 ஆயிரம் பறிமுதல்:

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை:

மேலும் சார்பதிவாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட அலுவலர்கள் மற்றும் 3 இடைத்தரகர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com