பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்
Published on

பெரம்பலூர் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா நேற்று நடந்தது. ஏற்கனவே இந்த விழா தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன், தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலன்) சத்தியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com