

உதகை,
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள கோடைவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு உதகை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய மாவட்ட காவல்துறை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் மே மாதம் 1-ம் தேதி (01-05-2026) காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள், சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோடைவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.