புதுக்கோட்டை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
புதுக்கோட்டை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி குரலரசி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் குரலரசி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குரலரசிக்கு பிரசவ வலி அதிகரித்ததையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் வித்யா கர்ப்பிணி குரலரசிக்கு பிரசவம் பார்த்தார். ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்ததில் குரலரசிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். பின்னர், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இக்கட்டான சூழ்நிலையில் குரலரசிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் வித்யாவுக்கும், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சதீஷ் குமாருக்கும் பலரும் நன்றி தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com