சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை

சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை
Published on

புகழூர் நகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகர் 3-வது தெரு பகுதியில் கான்கீரிட் சாலை, 17-வது வார்டுக்குட்பட்ட மாத்யூ நகர் முதல் ராம்நகர் வரையும், 16-வதுவார்டுக்குட்பட்ட செந்தூர் நகர், மீனாட்சி நகர், மோகனாநகர் பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுது. புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கி, மேற்கண்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வகுமரன், நவீன், நகராட்சி பொறியாளர் மலர்கொடி, பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com