காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மோடியை புகழ்ந்த இங்கிலாந்து தூதரக அதிகாரி

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியினர். ஆகவே தமிழ்நாடு பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் சூதப்பா சவுத்ரி பிரதமர் மோடியை புகழ்ந்து பேசும்போது, அமைச்சர், எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்து மேடையில் அமர்ந்திருந்தனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மோடியை புகழ்ந்த இங்கிலாந்து தூதரக அதிகாரி
Published on: 

சென்னை,

தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இங்கிலாந்து தூதரக அதிகாரி பாராட்டி பேசினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று, அதாவது இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தமிழ்நாடு பிரிவின் சார்பில் மாநில வர்த்தக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், அகில இந்திய தொழில் வல்லுநர்கள், அமைச்சரவையில் வலுவான எம்.பி.க்கள் ராபர்ட் புரூஸ், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் துணை உயர் ஆணையர் சூதப்பா சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அவர் கூறியதாவது: பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம், இங்கிலாந்துடன் போடப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன்மூலம், இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி அடையும். இந்தியா, இங்கிலாந்து இடையிலான வர்த்தகத்தில் இங்கிலாந்தின் 95 சதவீத பொருட்களுக்கும், இந்தியாவின் 90 சதவீத பொருட்களுக்கும் வரி சலுகை பெறும். அத்துடன் தடையில்லா வர்த்தகம் நடக்கும்.

தென்மாநிலங்களை சேர்ந்த தொழில் வல்லுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தெரிவித்தால் தேவையான உதவிகளை எங்களால் செய்ய முடியும். பிரதமர் மோடி ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் அருமையான ஒப்பந்தம். காலணிகள், டிஜிட்டல், ஆட்டோமொபைல், தொழில்கள் மேம்படும். முதலீடுகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்த மாதம் 25.5 பில்லியன் அளவு வர்த்தகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

X