சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்..!

இணைப்பு விழாவில் 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்..!
Published on

சென்னை,

த.வெ.க.வில் இணையும் விழா

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்),

15 ஆயிரம் நிர்வாகிகள்

எம்.ராம்கு மார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி). சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செயலாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர், ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com