சூளகிரி அருகேஇருதரப்பினர் மோதலில் 7 பேர் மீது வழக்கு

சூளகிரி அருகேஇருதரப்பினர் மோதலில் 7 பேர் மீது வழக்கு
Published on

சூளகிரி:

சூளகிரி அருகே ஏனுசோனை பொறம்போக்குபீடு கிராமத்தை சேர்ந்தவர் நாகன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்கள் சூளகிரியில் இருந்து ஊருக்கு கடந்த 5-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்தார். இதுகுறித்து நாகன் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன், நாகன், மனைவி சந்திராவை தாக்கினார். இதுகுறித்து சந்திரா கோண திம்மனப்பள்ளியை சேர்ந்த தனது அண்ணன் மணி என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து மணி தட்டி கேட்டபோது, மகேந்திரன் தரப்பினர் மணியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நாகன் கொடுத்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பரமேசன் (25), தர்மன் (22), கோவிந்தன் (24) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் மகேந்திரன் (23) கொடுத்த மற்றொரு புகாரில் தன்னை தாக்கி விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் நாகன் (34), சந்திரா (30), பெரிய நாகன் (36), மணி (37) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com