ஆத்தூர் வாலிபர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை: 56 சவரன் நகைகள் சிக்கியது

தாமிரபரணி ஆற்றில் ஒரு தங்க மூட்டை கிடைத்ததாகவும், அவற்றை பகிர்ந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வந்ததாகவும் முக்காணியை சேர்ந்த 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்க நகைகள் சிக்கியது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கிடந்த விவகாரம் தொடர்பாக ஆத்தூர் வாலிபர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் 56 சவரன் நகைகள் சிக்கியது.

28 சவரன் நகை, 38 தங்க கட்டிகள், பணம் பறிமுதல்

ராமநாதபுரம் முடுக்கு தருவை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப்பிரிவு போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 3 பேரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்களிடம் இருந்து 38 தங்க கட்டிகள், 28 சவரன் நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலிபர் வீட்டில் சோதனை

மேலும் முக்காணி தாமிரபரணி ஆற்றில் ஒரு தங்க மூட்டை கிடைத்ததாகவும், அவற்றை பகிர்ந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வந்ததாகவும் முக்காணியை சேர்ந்த 3 பேரும் கூறினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆத்தூர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 28) என்பவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

56 சவரன் நகைகள் சிக்கியது

அவரது வீட்டில் இருந்து தங்க சங்கிலி, ஆரம், மோதிரம், கைச்சங்கிலி, கம்மல் என 56 சவரன் நகைகளும், ரூ.67 ஆயிரமும் இருந்தது. தங்க மூட்டை கிடந்த விவகாரத்தில் கருப்பசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X