செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
செல்போன் திருடியவர் கைது
Published on

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 31). இவர் தனது வீட்டில் செல்போனை வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள், அந்த செல்போனை திருடிச்சென்று விட்டார். இதுகுறித்து கதிரவன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செல்போனை திருடியதாக திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜய் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com