தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.18 மற்றும் ஆக.19-ந் தேதி நீலகிரி, கோவை, புதுவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.20இல் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்யக்கூடும். 21-ந் தேதி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com