பராமரிப்பு பணி: மெமு ரெயில் சேவையில் நாளை முதல் மாற்றம்

புதுச்சேரி - திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
மெமு எக்ஸ்பிரஸ்
Published on

சென்னை,

பயணிகள் பாதுகாப்பு கருதி விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வருகிற 12, 13, 14, 15, 17, 18. 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரத்து

திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி -புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ், முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி- எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நாளை முதல் (12-ந் தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை ரெயில்வே கோட்டம்

தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடை யே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி - திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com