திருத்தணி முருகன் கோவிலில் தேர் சேவைகள் தற்காலிகமாக ரத்து

தேர் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
திருத்தணி முருகன் கோவிலில் தேர் சேவைகள் தற்காலிகமாக ரத்து
Published on: 

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் தேர் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.103 கோடி மதிப்பில் அன்னதானக் கூடம் விரிவாக்கம், ராஜ கோபுரம் மற்றும் மாட வீதியை இணைக்கும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவிலில் தேர்வீதி விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால், மாட வீதியில் அமைந்திருந்த அம்மா பக்தர்கள் இளைப்பாறும் மண்டபத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பணிகள் நடைபெறும் பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்காலிகமாக ரத்து

மேலும், மாட வீதியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதால், தங்கத்தேர், வெள்ளித்தேர். வெள்ளி மயில் வாகனம் மற்றும் அன்ன வாகனம் ஆகிய சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வளர்ச்சி பணிகள் நிறைவடைந்த பின்னர், மேற்கண்ட சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com