வரி வசூலை அதிகரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.5,000 மேல் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 2 லட்சம் பேருக்கு கியூ ஆர் கோடு நோட்டீஸ் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கியூ ஆர் கோடு மூலம் நிலுவையில் உள்ள வரியை செலுத்தலாம் என்றும், நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com