

சென்னை,
தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (CMPRF) செட்டிநாடு குழுமம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நன்கொடையை செட்டிநாடு குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் முத்தையா ராமசாமி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வழங்கினார்.
இந்த நன்கொடையை பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வின் மீதான செட்டிநாடு குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், மக்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
செட்டிநாடு குழுமத்தின் இந்த நிதிப் பங்களிப்பை முதல்-அமைச்சர் நன்றி பாராட்டியதுடன், மாநிலத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு அந்தக் குழுமம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அங்கீகரித்தார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட செட்டிநாடு குழுமம், தனது பல்துறை வணிகங்கள் மற்றும் தேசக் கட்டமைப்பு, அறப்பணிகளுக்கான நீடித்த அர்ப்பணிப்பின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.